புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2015

இலங்கையை சேர்ந்த 40 பேர் சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளார்கள்

சுவிஸ் வங்கியில் இலங்கையை சேர்ந்த 40 பேர் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்களின் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிகமாக தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் இருந்து இந்த விபரம் பெறப்பட்டுள்ளது.
அதன்படி உலகம் முழுவதும் இலங்கையை சேர்ந்த 1லட்சம் பேர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
இவ்வாறு புதைந்துள்ளவற்றில் 60 ஆயிரம் கணக்குகளில் விவரங்கள் முன்னரே கசிந்தன. இந்நிலையில் மீதமுள்ள கணக்குகளின் விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன.
அதன்படி எட்மண்ட் விஜினாய்கே பாலசூரியா என்பவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பெயரில் அதிகளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவருக்கு வடக்கு கொழும்பில் விளையாட்டு பொருட்கள் அங்காடியுள்ளது என வங்கி கணக்கு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவரது மனைவியின் கணக்கில் 10, 668 ,094 அமெரிக்க டொலர், மகளின் கணக்கில் 1,989,370 டொலர், உட்பட பாலசூரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் வங்கி கணக்கில் 16, 325, 742 அமெரிக்க டொலர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை பாலசூரியாவுக்கு சுவிஸ் வங்கியில் பல வருடங்களாக கணக்கு இருப்பதாக வங்கிசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வங்கி கணக்கை முடித்துகொண்டவர்கள் பட்டியலில் இலங்கையின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசாமான்யா விருதை பெற்றவரான ஜீவக லலித் புபேந்திர கொட்டிலவாலா பெயரும் உள்ளதாக அத்தகவலின் மூலம் அறிய முடிகின்றது.
அவர் கடந்த 1988 முதல் 1997 வரை தனது கணக்கின் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளார்.
இலங்கையில் இருப்பதாக விலாசம் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான கணக்குகள் வைத்திருப்பவர்கள் ஆவுஸ்திரெலியா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் வசிப்பதாகவும் அச்செய்தி குறிப்பிடுகின்றது.
இலங்கையில் உள்ளவர்கள் வெளிநாடுகளில் வங்கி கணக்கு வைத்துகொள்ள உரிமையுள்ளதா என்ற கேள்விக்கு இலங்கையின் செலாவணி கட்டுப்பாட்டாளர் ரூபசிங்க பதில் கூற மறுத்துவிட்டார்.
பெரும்பாலான வெளிநாட்டினர் தாங்கள் வரி ஏற்பு செய்த பணத்தை ஹெச்.எஸ்.பி.சி வங்கியில் பதுக்கிவைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரி stuart guliver தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு பிரித்தானியா மற்றும் சில வெளிநாட்டு பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.
அதேபோல அதிகமான பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியலில் கொழும்புவை சேர்ந்த சுப்பிரமணியன் சுரேந்திரன் என்ற தொழிலதிபரின் பெயர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இவர் சிலோன் மின்சாரத்துறையுடன் அதிகளவு தொழில் செய்பவராவார்.
இவரது கணக்கு மற்றும் இவரது மனைவியின் கணக்கில் சேர்த்து 13, 129, 904 அமெரிக்க டொலர்கள் இருப்பதாக அறிய முடிகின்றது.
இவர்கள் தவிர அனுர லெசிலி பெரெரா, அருனா ராஜேந்திரன், வாஸ்வனி, நிக்கில் கிஷோர், ஹிர்டிராமணி விநோத் கிஷோர், ஹிர்டிராமணி ஆகியோர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ad

ad