புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2015

ஈழத்தமிழர்களுக்கு நியாயம் வேண்டும்: ஜஸ்ரின் ட்ருடியோ


இலங்கையில் 3 தசாப்தமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவுற்ற போதிலும் ஆங்கு இன்னும் சமாதானம் எட்டிப்பார்க்கவில்லை என கனடாவின் எதிர்கட்சியான லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூறும் நிகழ்விற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ருடியோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எவ்வித நியாயங்களும் கிடைக்கவில்லை.
அத்துடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் அநேகமானோர் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கி வருகின்ற நிலைமை தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமல்லாது இறுதி கட்ட யுத்தம் இடம்பெற்ற போது காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், கனடாவின் லிபரல் கட்சி அதற்காக தொடர்ந்தும் வலியுறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியுத்தத்தில் உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்றது என்ன என்பது குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பது மற்றும் நிரந்தர சமாதானம் உள்ளிட்ட விடயங்களில் சர்வதேச சமூகத்துடன் இணைந்துசெயற்படுவோம் என லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ருடியோ தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.

ad

ad