சிலிங்கோ புராஃபட் செயரிங் நிறுவனத்தின் அக்கரைப்பற்று வங்கிக் கிளையில் வைப்புச் செய்த வாடிக்கையா ளர்கள் அவற்றை மீளச் செலுத்துமாறு கோரி தாக்கல் செய்த வழக்கிலேயே அவர் ஆஜரானார்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே ல
லித் கொத்தலாவலைக்கும் ஏனைய மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டபோது எதிரிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் இந்த வழக்குகளை குற்றவியல் வழக்காக தாக்கல் செய்வதற்கு பொலிஸாருக்கு எந்த ஏதுக்களும் இல்லை என ஆட்சேபனை செய்யப் பட்டதன் அடிப்படையில் நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணை செய்த பொலிஸார், நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கை விசாரித்த நீதிபதி எச். எம். முஹம்மட் பkல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.