புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

இது ஒரு ஊரவனின் உள்ளக்குமுறல்.!!!!!


வித்தியா என்ற. மாண்புற்ற மடந்தயை
நிச்சயம் நானிலம் விரைவினில் மறவாதினி.!
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம் 
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!

ஆயிரம் வருடத்து அழகிய கிராமத்தில்
கேவலம் இதுவரை கேட்டிரா சங்கதி..
கண்ணிய நன்மக்கள் வாழ்ந்திட்ட தீவினில்
கயவர்கள் சிலர் செய்த காமுகக் கொலையை..
ஈனப் பிறவிகளின் இழிவுச் செயலினை
வேருடன் அறுக்க ஊர் மக்கள் காவியம் படைத்தனர்..
போரிலும் வேறிலும் புண்பட்ட நெஞ்சங்கள்
ஊதிய சங்கொலி உலகெலாம் கேட்டது ..!!
வீரமும் வேட்கையும் விளைந்த ஊரினில்.,
ஊர் மக்கள் கூடி ஒர் இதிகாசம் படைத்தனர்.!
ஆட்சியும் அதிர்ந்திட, அரசியல் நிலை குலைந்திட
வீழ்ச்சியோ நமக்கென விரைந்தனர் யாழ்ப்பாணம் .!
வித்தகி,! வித்தியா நீ செத்தது ஓர் அவலம்.,
கேவலம்.!. மற்றவர் எம் மாண்பினை மறுத்தது .!
கோவலன் பத்தினி குடிகொண்ட தீவினில்
எம் குலமக்கள் மாட்சியில் குறையேது ?
கண்ணிய நன் மக்கள் வாழ்ந்த தீவதில்
போரெனும் பொறிக்குள் சிக்கிய மானிடம்.,
ஊரினை விட்டு எங்கேயோ தொலைந்து.
பாரினில் புகலிடம் தேடிப் பரிகசித்தது .!
வித்தைகள், மொத்தமும் கற்றவர் ஊரடா
விருந்தோம்பல் செய்த வியத்தகு மண்ணடா
திரைகடல் ஓடி செல்வம், திரவியம் சேர்த்து
வாணிபம் செய்த வரலாற்றுத் தீவடா.
மாண்பென பண்பென மணிமேகலை சொன்ன
காப்பியம் பற்றி கடைந்து எடுத்தவர் நாமடா
அப்படி தேர்ந்து தான் கரிகாலனவன்
கைப்பிடித்தனன் காரிகை எம்மூர் மங்கையை .!!
கேளடா மானிடா இவர்களின் கேவலக் கதையை
தூற்றுங்கள் நாம் என்றும் தோற்பவர் அல்லர்
வெற்று நிலமடா நம்மூர்., இப்போ நாம் வேற்று நாட்டினில்.
அப்படியிருப்பினும் அகிலத்தில் நாம் என்றும் ஆல விருட்சங்கள்..!
புறம் பாடும் அரக்கர் மனம் கொண்டோரே.! நீங்கள்
பறை சாற்றுங்கள் நாம் பயந்தவர்கள் அல்லர்.!!
புத்தி கெட்டு நீங்கள் புனையும் அத்தனையும்
புரிந்திட நமக்கு ஓர் புது உலகம் பிறக்கும்.!!
வித்தியா உனக்கு அவர்கள் வித்திட்ட தீ. பற்றி
எத்திக்கிலும் எரிந்தது நீ அறியாய்..
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!
----------------- சூரியபுத்திரன் -----------------

ad

ad