புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

ஜெயலலிதாவை எதிர்த்து டிராபிக் ராமசாமி போட்டி



ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் மாதம் 27–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு அ.தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட இருக்கிறார்.  எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. தி.மு.க.வும், விடுதலை சிறுத்தை கட்சிகளும் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்து விட்டன. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3–ந்தேதி முடிவு எடுக்கிறது. மற்ற கட்சிகளும் 3–ந்தேதிக்குள் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். 82 வயதாகும் இவர் தற்போது மக்கள் பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.

தமிழக அரசு திட்டங்களில் 'அம்மா' என்ற பெயரை நீக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதே போல் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு போட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 13–ந்தேதி நடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் டிராபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிட்டார். 1167 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததுடன் டெபாசிட்டும் இழந்தார்.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட டிராபிக் ராமசாமி முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன். தி.மு.க. தலைவர் கலைஞர், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பேன்" என்றார்.

மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்தாலும் நான் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்’’ என்று உறுதியாக கூறினார்.

ad

ad