புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2015

ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய மக்கள் மீதான பேர்மிய பௌத்த பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்பு பற்றிய தோழர் செந்தமிழ் குமரனின் ஆய்வுப் பதிவு:

இனப்படுகொலைகள் வரிசையில் (முன்னைய பேர்மா என்ற பெயர் கொண்ட ) மியர்மாரில் ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய
மக்களின் படுகொலை இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தோற்றுப் போன மனிதநேயத்தின் அவமான சாட்சியங்களாக...நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
குருடாகி செவிடாகிப் போன உலகம் வெட்கம் இன்றி சாட்சியமாக தனது அம்மண அலங்கோலங்கள் பற்றிய கவலை எதுவும் இன்றியே முடமாக இயங்குகின்றது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாக தமிழினப்படுகொலை சிங்கள பௌத்த பேரினவாதிகளால் நடந்தேறிய கொடுமைகளுக்கு நீதி கிடைக்க முன்பாகவே மற்றுமொரு பௌத்த பேரினவாத படுகொலை மியன்மாரில் நடந்து கொண்டு இருக்கும் படுகொலை.
ஹோலோகாஸ்ட் கண்காட்சியகம் (Holocaust museum) ஆய்வாளர்கள் மியான்மாரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பௌத்த பேரினவாத மனித உரிமை மீறல்களை இனப்படுகொலையின் ஆரம்பம் என வரையறுத்து உள்ளார்கள்.
மனிதர்கள் வாழும் பூமியாக இந்த உலகம் இல்லை என்ற கொடுமைகளை அனுமதித்தபடியே மனிதம் செத்த பிணக்காடாக இந்த பூமி மாறிக் கொண்டு இருக்கின்றது.
உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த "ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான போராட்டங்கள்" களம் இறக்கப்படாதவரையில் இனப்படுகொலைகளின் கரை படிந்த வரலாறுகள் குருதியில் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும்.
எந்த இனம் அழிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த மானிடமும் என்று குரல் கொடுக்கின்றதோ அன்று தான் இந்த பூமி மனிதர்கள் வாழும் பூமியாக மாற்றம் கொள்ளும்.
ரோகிங்கியா (Rohingya) இன இஸ்லாமிய மக்கள் மீதான பேர்மிய பௌத்த பேரினவாதிகளின் இனச்சுத்திகரிப்பு பற்றிய தோழர் செந்தமிழ் குமரனின் ஆய்வுப் பதிவு:

ad

ad