புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2015

ஜெயலலிதாவுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார்’ திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி



ஜெயலலிதா போட்டியிடுவதாக இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக,
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க. அமைச்சராக இருந்து பின்பு மனவருத்தம் காரணமாக அங்கிருந்து தி.மு.க.வுக்கு சென்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். தற்போது அவர் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். சமீபகாலமாக அவர் தி.மு.க.வுடன் எந்த வித ஒட்டும் இல்லாமல், உறவும் இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் தி.மு.க.வின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவது இல்லை.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகிறது. சென்னையில் பல நாட்களாக தங்கி இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

பதவி கொடுத்து அழகு பார்த்தார்

நான் அரசியலில் அறிமுகம் ஆனேன் என்றால் அது ‘அம்மா’வால் தான். அம்மா மூலமாக தான் நான் அரசியலில் கால் ஊன்றினேன். சாதாரண தொண்டனான எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். தன்னுடைய கட்சியின் கடைக்கோடி தொண்டனையும் பதவியில் அமர்த்தும் பெருந்தன்மை உடையவர் அம்மா தான்.

அவருடைய தலைமையில் தான் என்னுடைய 3 மகன்களின் திருமணம் நடந்தது. அவர் தன்னுடைய பொற்கரங்களால் தாலி எடுத்து தந்ததால் தான் என்னுடைய மகன்களின் வாழ்வு வளமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. 

அப்படிப்பட்ட தாய் தலைமையிலான அ.தி.மு.க.வில் இருந்து சிலபல மனக்கசப்புகளால் வெளியேறி தி.மு.க.வில் சேர்ந்தேன். கிறிஸ்தவர்களின் புனித நூலான ‘பைபிளில்’ குறிப்பிடப்பட்டுள்ள கெட்டக்குமாரன் வாழ்க்கையை போல, மீண்டும் நான் அ.தி.மு.க.வுக்கு திரும்புவதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

கடைசி தொண்டனாக இருப்பேன்

இந்த நிலையில் அம்மா திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக பரவலாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்கிறீர்கள். அப்படி அவர்கள் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தால், நானும், தென் மாவட்ட மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். 

அப்படி ஒரு நிலை வந்தால், என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை அடுத்த நொடியே ராஜினாமா செய்து அம்மாவின் வெற்றிக்காக உழைக்கும் கடைசி தொண்டனாக இருப்பேன். இதுவரை யாரும் அந்த தொகுதியில் பெற்றிராத வெற்றி அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் அருளால் அம்மாவுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

ad

ad