புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2015

2000ம் ஆண்டு மிருசுவில் பிரதேசத்தில் 8 பேரை கொலை செய்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை


மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை விதித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய நான்கு படைவீரர்களும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ம் ஆண்டு 8 பேரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2000ம் ஆண்டு டிசம்பர் மதம் 19ம் திகதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் 5 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சார்ஜன்ட் 8 பேரை கொலை செய்தமைக்கான போதுமான சாட்சியங்கள் இருப்பதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய 4 பேருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

ad

ad