புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2015

வத்தளையில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்

.

வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர்
தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி பதிவானமை அனைவரும் அறிந்ததே. இந்த கொலையை புரிந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.
பாத்திமாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த சுரேஷ் ,பாத்திமாவின் காதல் மறுப்பினால் வாழ்நாள் முழுவதும் தேவதாஸ் கோலம் பூண்டுகொள்ள விரும்பாமல் யாருமே எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்யத் துணிந்தான். அன்றைய தினம் பெரும் மழை பெய்யும் என்று கூறப்பட்டது. மக்கள் பெரும் மழைக்குள் சிக்­கு­வ­தற்கு முன் தத்­த­மது ,வீடு­களை நோக்கி விரைந்து கொண்­டி­ருந்த நேர­மது. வத்­தளை, ஹெந்­தலை சந்­தி­யி­லுள்ள பிர­பல புட­வைக்­க­டைக்குள் தனது காத­லி­யான (19 வயது) பாத்­தி­மாவைச் சந்­திக்கும் முக­மாக வழமை போல் நுழை­கின்றான் சுரேஷ் (23வயது) (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது).
“காத­லி­யுடன் கதைப்­ப­தற்­காகத் தான் வரு­கின்றான் என்று அங்கு பணி­பு­ரி­ப­வர்கள் பலரும் எண்­ணி­ய­வாறு, சிறிய புன்­சி­ரிப்­புடன் சுரேஷை வர­வேற்­றார்கள். எனினும், அவர்கள் அனைவரும் சற்றும் எதிர்­பார்க்­காத ஒரு காரி­யத்தை சில மணி நிமி­டங்­க­ளுக்குள் செய்து முடித்தான் சுரேஷ்.
நேராகப் பாத்­திமா இருக்கும் இடத்தை நோக்கிச் சென்­றவன், சுற்றி இருப்­ப­வர்­களை பற்றி சற்றும் சிந்­திக்­காது தனது காற்­சட்டைப் பையினுள் மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியை எடுத்து தனது ஆத்­திரம் தீரும் வரை பாத்­தி­மாவின் நெஞ்சுப் பகு­தியில் குத்­தினான். சுமார் 8 தட­வை­க­ளுக்கு மேல் சுரேஷின் கையி­லி­ருந்த கத்தி பாத்­தி­மாவின் நெஞ்சுப் பகு­தியை பதம் பார்க்க, “நீரின்றித் தவிக்கும் மீனைப்” போல் வலியால் துடி­து­டித்தாள். எனினும், அதன் பின்னும் சுரேஷின் ஆத்­திரம் தீர­வில்லை. பாத்­திமா நிலத்தில் வீழ்ந்து உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்த நிலை­யிலும் கூட, எவ்­வித ஈவி­ரக்­க­முமின்றி பாத்­தி­மாவின் உடலின் பல இடங்­களில் ஆழ­மான காயங்­களை ஏற்­ப­டுத்­தினான்.
இத­னைத்­தொ­டர்ந்து, பாத்­தி­மாவைத் தாக்­கிய அதே கத்­தியை எடுத்து தனது உயிரை மாய்த்­துக்­கொள்­வ­தற்­காக கழுத்தை அறுத்­துக்­கொண்டு. வலி தாங்க முடி­யாமல் நிலத்தில் வீழ்ந்து துடித்தான். உடனே புட­வைக்­க­டையில் பணி­பு­ரியும் பெண்கள் பலத்த சத்­தத்­துடன் சத்­த­மிட, வீதிப் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­பட்­டி­ருந்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சம்­பவ இடத்தை வந்­த­டைந்­தனர். அதன்பின் அங்­கி­ருந்­த­வர்­களின் உத­வி­யுடன் இரு­வ­ரையும் வத்­தளைப் பகு­தி­யி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முற்­பட்­டனர். எனினும், துர­திஷ்­ட­வ­ச­மாக கொண்டு செல்லும் வழி­யி­லேயே பாத்­தி­மாவின் உயிர் அவளை விட்டுப் பிரிந்­தது. மேலும் தனியார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சுரேஷ் ஆபத்­தான நிலையில் றாகமை போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்டான்.

ad

ad