புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2015

கேரள இடைத்தேர்தலில் நடிகை குஷ்பு பிரசாரம்


கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு பிரசாரம்
செய்தார்.

கேரள மாநிலம் அருவிக்கரை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கேரள சபாநாயகர் கார்த்திகேயன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்திகேயனின் மகன் சபரிநாதன் போட்டியிடுகிறார். பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய  அமைச்சர் ஓ.ராஜகோபால், கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயகுமாரும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்டுகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்று உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து, ஆரிய நாடு பகுதியில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

" ராகுல்காந்தி ஏழை விவசாயிகளுக்காகப்  போராடி வருகிறார். அவர் மாநிலம் வாரியாக சென்று விவசாயிகளுக்காக நடைப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்டு அணிந்துகொண்டு, விமானப்பயணம் செய்து வெளிநாடுகளில் சுற்றுகிறார். அங்கு 'செல்பி' எடுக்கிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை பாரதிய ஜனதா நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதாவின் முக்கிய பொறுப்பாளர்கள் சர்ச்சையில் சிக்கி உள்ளனர். மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜா முண்டே போன்றவர்களை இன்னும் நீக்காதது ஏன்? பிரதமர் மோடி ஹிட்லர் போல ஆட்சி செய்கிறார். அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துபோய் உள்ளனர்.

தமிழகத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இதனால் மந்திரிகள் அனைவரும் இந்த தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். ஜெயலலிதாவுக்கு ஓட்டு குறைந்தால் தங்கள் பதவி பறிபோய்விடும் என்று அமைச்சர்கள்  பயத்துடன் உள்ளனர்" என்று கூறினார்.

ad

ad