புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2015

ராஜித சேனாரத்ன பசில் ராஜபக்சவுடன் சந்திப்பு! 2 மணிநேரம் இரகசிய பேச்சு


மஹிந்த ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை அழிக்கவுள்ளதாக சத்துர சேனாரத்ன (ராஜிதவின் மகன்) சவால் விடுக்கும் நிலையில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று மாலை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து 2 மணிநேர இரகசிய  பேச்சு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது கொள்ளுபிட்டி டேர்டன்ஸ் வைத்தியசாலையின் 8வது மாடியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பசில் ராஜபக்சவை நேற்று மாலை சந்திக்கச் சென்ற ராஜித சேனாரத்ன, அங்கிருந்த அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு அறைக்கு பூட்டுப் போட்டு சுமார் 2 மணிநேரம் இரகசிய பேச்சு நடத்தியதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் பசில் ராஜபக்ச மற்றும் புஷ்பா ராஜபக்ச ஆகியோரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க ராஜித சேனாரத்ன பின்னின்று செயற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த இரகசியம்.
பசில் மற்றும் ராஜித ஆகியோர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களாவர்.
எதிர்வரும் தேர்தலில் ஏதாவது கட்சியில் போட்டியிட எதிர்பார்த்துள்ள ராஜிதவின் மகன் சத்துர சேனாரத்ன, அதற்கான கள நிலைகளை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் 'முடிந்தால் மஹிந்த ராஜபக்ச பெலியத்த தொகுதியில் தேர்தல் கேட்கட்டும்' என்று சவால் விடுத்து தனது தேர்தல் சமரை ஆரம்பித்துள்ளார்.
எந்தவொரு தேர்தலையும் சந்தித்திராத சத்துர போன்றவர்கள் இவ்வாறு மஹிந்த ராஜபக்சவிற்கு சவால் விடுப்பதாகது மஹிந்தவின் வாக்கு பலத்தை அதிகரிக்க உதவி செய்யும்.
இதற்கு முன்னர் தூய்மையான நாளை அமைப்பின் தலைவர் அத்துரலியே ரதன தேரரும் பசில் ராஜபக்சவை இரகசியமாகச் சந்தித்து மூன்று மணிநேர இரகசிய சந்திப்பில் ஈடுபட்டார் என இணையத்தளம் ஒன்று  தகவல் வெளியிட்டிருந்தது.
தூய்மையான நாளை அமைப்பின் முக்கிய உறுப்பினர் தான் என சத்துர சேனாரத்ன கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad