புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2015

மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு



மும்பை மலாடு மேற்கு லட்சுமிநகர் குடிசை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள், கடந்த 17ந் தேதி இரவு அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தனர். சாராயம் குடித்த சில நிமிடங்களில் அவர்களுக்கு வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. பெரும்பாலானோர் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பரிசோதனையில் அவர்கள் குடித்த சாராயத்தில் விஷத்தன்மை இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 13 பேர் அன்றைய தினமே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 90–யை தொட்டது. மேலும், 31 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இதில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த அனைவரும் கூலித் தொழில் செய்து வரும் தொழிலாளிகளே ஆவர்.

ad

ad