-

2 ஜூன், 2015

யாழ்.சிறையில் வைத்து 9 பேரின் இரத்தமாதிரிகளும் பெறப்பட்டன



புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருடைய இரத்த மாதிரிகள்  யாழ். சிறைச்சாலையில் வைத்து இன்று பெறப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.  thx uthayan 
 
புங்குடுதீவு மாணவியின்  கொலை தொடர்பிலான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
அதன்போது  யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் சிரேஸ்ட அத்தியட்சகர் ஊடாக சந்தேக நபர்களிடம் இரத்தமாதிரிகளைப் பெறுமாறு மன்று சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டது.
 
அதற்கமைய வழக்கு விசாரணைகளை அடுத்து இன்று மதியம்  யாழ். சிறைச்சாலையில் குறித்த 9 பேரினதும் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும் இரத்தமாதிரிகளின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=555904062201272458#sthash.Dq0f7GuT.dpuf

ad

ad