28 ஜூன், 2015

மைத்திரி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வாரா பொன்சேகா?


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுமாறு, ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் திலங்க சுமத்திபால ஆகியோர் குறித்த அழைப்பினை விடுத்திருந்தார்கள்.
அதற்கமைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.
இதற்கடையில், பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களின் யோசனைக்கு, கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து சிறந்த பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொதுத்தேர்தலின் போது ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிப்பதா அல்லது ஏற்றுக்கொள்வதா என தெரியாமல் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குழப்பத்தில் உள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்