புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2015

குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் முடக்கப்படும்: வெளிவிவகார அமைச்சு


குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் தகவலின் படி,
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர்  கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் சொத்துக்களை முடக்குவதற்கான விசாரணைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் அவரின் சொத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இதேவேளை குமரன் பத்மநாதன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடையானது கடந்த பெப்ரவரி மாதம் விதிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதனால் அது குறித்து பூரண கண்காணிப்ப நடத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு புலனாய்வு வலையமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குமரன் பத்மநாதனை மகிந்த அரசாங்கம் ஏன் பாதுகாத்து வைத்திருந்தது என கேள்வி எழுப்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
கடந்த அரசாங்கமானது கிளிநொச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஆரம்பித்து அதனை குமரன் பத்மநாதனிடம் ஒப்படைத்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவிலான சர்வதேச சொத்துக்கள் பற்றிய விபரங்கள் தெரிந்த குமரன் பத்மநாதனை கடந்த அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்து வைத்திருந்தது..

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு செயற்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் இவரை பாதுகாத்து வைத்திருந்தமைக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் எமது அரசாங்கம் குமரன் பத்மநாதன் நாட்டை வெளியேறத் தடை விதித்துள்ளது.
அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தி வருவதாககக் குறிப்பிட்டுள்ள அவர் குமரன் பத்மநாதனை பயன்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் சொத்துக்களை முடக்குவதற்கு தாம் அத்தனை நடவடிக்கைகளையும் முனைப்புக்காட்டி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad