புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2015

ஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் போட்டி ஏனைய இடங்களில் தனித்து


ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து
ள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
ஐ.தே.க தலைமை யகத்தில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் தேர்தல் கூட்டணி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஐ.தே.கவின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம மற்றும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் காசிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இப்பேச்சு வார்த்தை நம்பிக்கைக்கும் வகையில் அமைந்திருந்ததாக தெரியவருகிறது.
வடக்கு, கிழக்கில் நான்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி யிடவிருப்பதாக சந்திப்பின் பின்னர் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். இது தொடர்பில் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும், ஐ.தே.க வேட்புமனு வழங்காத இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
அதேநேரம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப் பொன்றும் நேற்று நடைபெற்றது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த நஜா முஹமட் மற்றும் சிராஜ் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டி ருந்தனர். கருத்து இணக்கப்பாட்டுடன் எதிர்வரும் தேர்தலில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
இதுஇவ்விதமிருக்க தேர்தல் கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று கட்சியின் தலைமை யகமான தாருஸலாமில் கூடி ஆராய்ந் திருந்தது

ad

ad