புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2015

இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சங்கக்காரா, இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சங்கக்காரா, நாட்வெஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சர்ரே- குளோசஸ்சியர் அணிகள் மோதிய போட்டியில் சர்ரே அணி 4 விக்கெட் விக்கெட்டுகளால் 'திரில்' வெற்றியை பெற்றது.
முதலில் விளையாடிய குளோசஸ்சியர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றது. இந்த அணியில் மார்ஷால் (32), காக்பெய்ன் (31), ஹான்ஸ்கோம்ப் (39) ஆகியோர் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
155 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய சர்ரே அணிக்கு ரோய் (34), சங்கக்காரா (34), ஃபோக்ஸ் (27) நல்ல நிலைமையை உருவாக்கி கொடுத்தனர். இருப்பினும் சர்ரே அணி தோல்வியின் விளிம்புக்கு சென்றது.
கடைசி ஒரு பந்தில் 6 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், 40 வயதான அசார் மொகட் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இவர் 14 பந்தில் 2 சிக்சர் உட்பட 22 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் சர்ரே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து ’திரில்’ வெற்றி பெற்றது.

ad

ad