புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

ஜிம்பாப்வே அணியை பந்தாடியது:  இந்தியா அபார வெற்றி


ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 30 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.அடுத்து இவ்விரு அணிகள் இடையே இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டிகள் நடக்கின்றன. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதன்படி இந்திய அணி முதலில் களம் இறங்கியது. ரகானேவும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்களை சேர்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. முரளி விஜய் 34 ரன்களில் வெளியேறினர்.  இதைதொடர்ந்து ரகானே (34), மனிஷ் பாண்டே(19), ஜாதவ் (9), பின்னி(11) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஓரளவு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 39 ரன்களை சேர்த்து இருந்தார்.  இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களை சேர்த்தது. 

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்  இறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்க விக்கெட்டுக்கு 55 ரன்களை சேர்த்து அசத்தியது. 8.1 ஓவர்களில் 55 ரன்களை சேர்த்திருந்த நிலையில், மசகட்சா 28 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் மற்றொரு துவக்க வீரர் சிப்பாபா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைதொடர்ந்து வந்த வீரர்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இதனால், ஜிம்பாப்வே அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சார் படேல் 3 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

ஆட்ட நாயகன் விருது  இந்திய வீரர் அக்சார் படேலுக்கு வழங்கப்பட்டது. 

ad

ad