புனர்வாழ்வு அதிகார சபையினால் மீளக்குடியமர்;ந்த மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் இலங்கை கடன் உருவாக்கி கொடுத்துள்ளதாக
புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புவனேந்திரன் தெரிவித்தார்.
புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புவனேந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு அதிகார சபையினால் இம்முறை பரீட்சார்த்தமாக மீளக்குடியமர்ந்த 75 குடும்ப அங்கத்தவர்களுக்கு பலவகையான தொழில் முயற்சிகளை வழங்குவதற்கும் அதனூடாக வருமானத்தை ஈட்டுவதற்குமாக இலங்கை வங்கியின் மூலம் இன்றைய தினம் 10.8 மில்லியன் ரூபா அவர்களுக்கான வங்கிக் கடன்களை பெற்றுக் கொடுக்கிறது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் பத்மநாதன் உதவியுடன் இத்திட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடிப்போம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்க்கை வளம்படுத்தும் வகையில் வீடுகளை திருத்துவதற்கு 1லட்சம் ரூபா ,சொத்துக்கள் இழந்திருந்தால் இழப்பீட்டு தொகையாக 1லட்சம் ரூபா மற்றும் போரில் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும், வங்கிக்கடன்களையும் வழங்குகிறோம்.
ஆகவே நாங்கள் தொழில்களுக்கு மட்டுமே கடன்களை பெற்றுக் கொடுப்போம்.வேறு எந்த தேவைக்காகவும் அல்ல.எனவே மீளக்குடியமர்ந்த மக்கள் இவ்வாறான கடன் திட்டத்தை பெற்று வாழ்வாதாரத்தை வளப்படுத்தி வருமானத்தை ஈட்டுவதற்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.