புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

பண்ணிரன்டு இலட்சம் செலவு-புங்குடுதீவு 4 தம்பர்கடை சந்தி-துரைசுவாமி வித்தியாலய வீதி திருத்தம்

புங்குடுதீவு 4 ம் வட்டாரத்தில் தம்பர்கடை சந்தியிலிருந்து யா/ புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலயத்திற்கு செல்லும் 750 மீற்றர் நீளமுடைய வீதி




செப்பனிடுவதற்கு சல்லி தார் என்பன பறிக்கப்பட்டுள்ளது . இன்னும் சில நாட்களில் இப்பாதை திருத்தப்படும் என அறியமுடிகிறது. இப் பாதையை பாடசாலை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் திருத்தபடுவது மகிழ்ச்சிக்குரியது என ஊரில் பலர் கருத்து தெரிவிப்பதை அவதானிக்க முடிகிறது .
எப்படியிருப்பினும் ஏக்கம் நிறைந்த கவலையும் கானமுடிகிறது அதாவது இப்பாதை ரூபா பண்ணிரன்டு இலட்சம் செலவு செய்யவேன்டியுள்ளது . ஆனால் இதற்கு ஒதுக்கிய நிதி ரூபா பத்து இலட்சம் மட்டுமே மிகுதியான இரண்டு லட்சம் மக்களின் பங்களிப்பாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூலி வேலைசெய்து நாளாந்த சீவியத்தை நடத்தும் பலர் தங்கள் வேலைகளை விட்டு இவ் திருத்த வேலையில் பங்குகொள்ள வேன்டிய கட்டாயம் உள்ளது .
மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகளை பிரதேச சபைகளிடமிருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் ஒப்பந்த நிறுவனம் தங்கள் பணியாளர்களை வைத்து வேலைசெய்வதைதான் கானமுடிகிறது 

ad

ad