புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதம வேட்பாளருமாகிய பொன் செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் ஆகியோர் மாவட்டச் செயலகத்திற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்திருந்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில்,
1.பா.அரியநேத்திரன் (அம்பிளாந்துறை) 
2.பொன்.செல்வராஜா (கல்லாறு)
3.சீ.யோகேஸ்வரன் (வாழைச்சேனை)
4.இரா.துரைரெத்தினம் (காரைதீவு)
5.கோ.கருணாகரன் (செட்டிபாளையம்)
6.சிறிநேசன் (மகிழடித்தீவு)
7. ஏ.ஏ. அமல் (செங்கலடி)
8. ஜீ. சவுந்தரராஜன் (மட்டக்களப்பு) 
ஆகியோரின் பெயர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதம வேட்பாளர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

ad

ad