புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதனிடையே, ஜெயலலிதா உட்பட 4 பேரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் விடுதலை செய்து கடந்த மே 11ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா உட்பட 4 பேரின் ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதால் ஜாமீன் வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

ad

ad