புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம்: ஆய்வில் வெளியான தகவல்

சர்வதேச அளவில் பாதுகாப்பான நாடுகளை குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ValuePenguin என்ற ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் 2015ம் ஆண்டின் உலகின் சிறந்த பாதுகாப்பான நாடுகளை பற்றி அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 107 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை, திருட்டு, அடிதடி மற்றும் சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை, கார்பன்–டை-ஆக்சைடு வாயு வெளியேற்றத்தின் அளவு, மக்கள் தொகைக்கு ஏற்ப பொலிசாரின் எண்ணிக்கை, பிறப்பு விகிதம் உள்ளிட்ட அளவுகோல்கள் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது மட்டுமின்றி, உலக வங்கி, ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து பேசிய ValuePenguin நிறுவனத்தின் நிர்வாகியான Andrew Pentis, இந்த ஆய்வில் குற்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பிறப்பி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் சுவிட்சர்லாந்து நாடு மிக அதிக அளவு மதிப்பெண்களை பெற்றுள்ளது என்றார்.
இருப்பினும், சுவிஸில் நடைபெறும் மலையேற்றம் உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுக்களில் இறப்பவர்களை இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகிலேயே பாதுகாப்பான முதல் 10 நாடுகளின் பட்டியல்
1. சுவிட்சர்லாந்து
2. சிங்கப்பூர்
3. ஸ்பெயின்
4. ஜப்பான்
5. சைப்ரஸ்
6. இத்தாலி
7. பிரான்ஸ்
8. ஐயர்லாந்து
9. ஐஸ்லாந்து
10. கோஸ்டா ரிகா
ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பெற்றுள்ளன.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா 48-வது இடமும், ரஷ்யா 75-வது இடமும் பிடித்துள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை 63-வது இடத்திலும், இந்தியா 80-வது இடத்திலும் உள்ளன.
உலக பாரம்பரியமிக்க நாடான இங்கிலாந்து உலகளவில் பாதுகாப்பான 107 நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ad

ad