புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் என்பன இணைந்து இணைந்து நடாத்திய அழைப்பு உதைபந்தாட்ட போட்டி

கடந்த 7 . 8 , 9 திகதிகளில் யில் ஊர்காவற்துறை
தம்பாட்டி காந்தி விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது . ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா
விளையாட்டு கழகம் இரண்டாவது இடத்தினை பெற்றது . புங்குடுதீவு சன் ஸ்டார் கழகமும் , புங்குடுதீவு சென்ட் சேவியர் கழகமும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன . தம்பாட்டி காந்தி கழகமும் - புங்குடுதீவு சன் ஸ்டார் கழகமும் மோதிக் கொண்ட அரையிறுதிப் போட்டியில் போட்டி நடுவர் இழைத்த மாபெரும் தவறினால் சன் ஸ்டார் கழகம் போட்டியிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது .
வே . சு . கருணாகரன் , சுப்பிரமணியம் கோபாலபிள்ளை , ஊர்காவற்றுறை பங்குத்தந்தை , மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி போன்றோர் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக கலந்துகொண்டனர் .
நாரந்தனையை பிறப்பிடமாகவும் - புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் . பேதுரு இராயப்பு அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் அனுசரணையுடன் பாரதி சனசமூக நிலையத்தால் இச்சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டது

ad

ad