புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் - கேமராமேன் சுட்டுக்கொலை



அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணம் ரோனோகி என்ற இடத்தில் டபிள்யூ.டி.பி.ஜே. என்ற டெலிவிஷன் சேனல் அலுவலகம் உள்ளது. அந்த சேனலின் பெண் நிருபர் அலிசன் பார்க்கர் (வயது 24), கேமராமேன் ஆடம் வார்டு (27) ஆகியோர்  அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ஒரு செய்தியின் நேரடி ஒளிபரப்புக்காக சென்றனர். அங்கு வந்த பொதுமக்களிடம் மைக்கை நீட்டி, பேட்டி கண்டனர். 

அந்த நிகழ்ச்சி, நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாகியால் சுட்டார். 8 தடவை துப்பாக்கியால் சுட்டது, அந்த நேரத்தில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நன்றாக கேட்டது. புன்னகைத்துக் கொண்டிருந்த பெண் நிருபரும், கேமராமேனும் அலறியபடியே கீழே சாயும் காட்சியும் தெரிந்தது. கேமராவும் கீழே சாய்ந்தது. இந்த துப்பாக்கி சூட்டில், பெண் நிருபரும், கேமராமேனும் பலியானார்கள். 

ad

ad