புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2015

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் பிஸ்வால்


news




















தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை வருகை தந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது,  தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படும் என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நிஷா பீஷ்வால் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்து பேசப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை வலியுறுத்தும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய முக்கிய பங்காளர்களின் ஒத்துழைப்புடனான இந்த தீர்மானம் அடுத்த மாதம் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்டவுள்ளதாக மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு கடந்த ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் மூன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்கா முன்னின்று செயற்பட்டிருந்தது.

எனினும் எவ்வாறாயினும் புதிய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உறுதியளித்த உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக நிஷா பிஷ்வால் தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் நிஷா பிஷ்வால் எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

எனினும் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை பின்பற்றியதாக இந்த தீர்மானம் இருக்குமென நிஷா பிஷ்வால் கூறியுள்ளார்.

ad

ad