புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

பிரான்ஸ்,இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 38 நாடுகள் இணை அனுசரணைசுவீட்ஸர்லாந்து


 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான போர்க்குற்ற யோசனைக்கு 25 நாடுகள் அனுசரணை வழங்கியதாக முன்னர் கூறப்பட்டபோதும் அந்த வரிசையில 38 நாடுகள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று எஞ்சிய நாடுகளும் இணை அனுசரணை பட்டியலில் தம்மை இணைந்துக்கொள்ளவுள்ளன என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.
அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, கிரீஸ், லத்தீவியா, மொன்டிக்ரோ, போலந்து, ரோமேனியா, இலங்கை, மெசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளே முன்னதாக இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன.
இந்தநிலையில் எஸ்டோனியா, பிரான்ஸ், அயர்லாந்து, ஜப்பான், கொரியா, சியாரா லியோன், ஒஸ்ரியா, பொஸ்னியா, ஹேர்ஹேகோவேனியா, கனடா, சைப்பிரஸ், செக் மக்கள் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜோர்ஜியா, ஹங்கேரி, இத்தாலி, லிச்டென்டின், லக்சம்போக், மோல்டா, நோர்வே, சுலோவேக்கியா, ஸ்பெய்ன், சுவீடன்,  ஆகியன புதிதாக நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையின் யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.

ad

ad