-

3 அக்., 2015

வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்!

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மற்றும் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில், ஆகியவற்றுக்கும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் மேற்படி ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட வீமன்காமம், சந்தை சந்தி, ஒட்டகப்புலம் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

ad

ad