புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2015

இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா



தென் ஆப்பிரிக்க  அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி வென்றது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 10 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் முதலில் பந்து வீசவுள்ளதாக தெரிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான்( ரோகித் சர்மா களமிறங்கினர். 3.6 ஓவர்களில் 28 ரன்களை சேர்த்த நிலையில் தொடக்க ஜோடியை மோரிஸ் பிரித்தார். மோரிஸ் வீசிய பந்தில் ஷிகர் தவான் (11) எல்.பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

3 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோலி 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் 2 வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறிது நேரத்தில் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மாவும் மில்லரின் துல்லிய துரோவில் 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.இதைதொடர்ந்து  களம் இறங்கிய ராயுடு ரன் எதுவும் இன்றி வெளியேற இந்திய அணி 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தோனி கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்களில் மோர்கல் பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். ஓரளவு நம்பிக்கை தந்த ரெய்னாவும் 22 ரன்களில் வெளியேற இந்திய அணி முற்றிலும் ஆட்டம் கண்டது. 

பின் வந்த கடைநிலை வீரர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நடையை கட்ட இந்திய அணி 17.2 ஓவர்களில் வெறும் 92 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்க்கேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், நெருக்கடி எதுவும் இன்றி ரன்களையும் சேர்த்து வந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா(2), டி வில்லியர்ஸ் (19), டு பிளஸிஸ் (16) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் 11 ஓவரின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து  64 ரன்கள் சேர்த்து இருந்த போது, இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால்  ஆவேசம் அடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் குடி நீர் பாட்டில்களை வீசினர். இதனால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.  சிறிது நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் துவங்க 2 ஒவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மீண்டும் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள் வீசப்பட்டதால், ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. அரைமணி நேரத்திற்கு பின் மீண்டும் போட்டி துவங்கியது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.

ad

ad