புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2015

90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது

90 பேரைக் கொண்ட அமைச்சரவையினால் ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது 90 பேரைக்கொண்ட அமைச்சரவையினால்
ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அரசாங்கம் வீண் விரயத்தையும் மிதமிஞ்சிய செலவுகளையும் தவிர்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மிக விசாலமான ஓர் அமைச்சரவையைக் கொண்டு ஊழல் மோசடிகளை தடுக்க முடியும் என தாம் கருதவில்லை என்பதுடன் வீண் விரயத்தை தடுப்பதற்கான திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஊழல் மோசடிகள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக் கூடாது எனவும், மோசடிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். யார் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வீண் விரயத்தை தடுப்பதன் மூலமே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad