புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

தனியாக இருந்த பெண் கொலை: கள்ளக்காதலனுடன் பெண் சிக்கினார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்



வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கள்ளக்காதலுடன் பெண் சிக்கினார். நகைக்காக கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இளம்பெண் கொலைமதுரை தல்லாகுளம், சின்னசொக்கிகுளம் பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி, புதூர் மின்வாரிய
அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயக்குமார். துபாயில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தல்லாகுளம் முதலியார் கிழக்கு தெருவை சேர்ந்த பவித்ராவுக்கும் (வயது 23) கடந்த (2014) ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.
பவித்ரா தனது மாமியாருடன் மாடி வீட்டில் வசித்து வந்தார். மாமியார் வேலைக்கு சென்றதும், கடந்த 21–ந் தேதி பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டுக்குள் பவித்ரா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த 9½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
டெய்லர் கடை பெண்இதுகுறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சட்டம்– ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
சம்பவத்தன்று வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் உறவினர்கள் யாரும் வந்தார்களா என்று போலீசார் விசாரித்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
பவித்ரா கொலை செய்யப்படுவதற்கு முன்பு போன் அழைப்பு வந்துள்ளது. அந்த நம்பரை வைத்து விசாரித்ததில் செல்லூர் பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது.
பவித்ராவின் மாமியாரிடம் விசாரித்ததில் கொலை நடந்ததற்கு முதல் நாள் தல்லாகுளத்தில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் வந்ததாக அவர் தெரிவித்தார்.
வீட்டில் விசாரணைஇதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடைக்குச் சென்று விசாரித்தனர். அதில், அந்த பெண் செல்லூர் அகிம்சாபுரத்தைச் சேர்ந்த சியாமளா (30) என்பதும் கொலை நடந்த தினத்தில் இருந்து வேலைக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது. அவரது வீடும் பூட்டிக் கிடந்தது.
அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் சியாமளாவின் கணவர் வரதராஜன் பூ வியாபாரி. காசநோயாளி என்பன போன்ற விவரங்கள் தெரியவந்தன.
பவித்ராவுக்கு வந்த தொலைபேசி எண் செல்லூர் பகுதி என்பதால் சியாமளா மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இந்தநிலையில் வீட்டிற்கு திரும்பிய சியாமளாவிடம் அருகில் உள்ள வீட்டினர் போலீசார் வந்து சென்ற விவரத்தை தெரிவித்தனர்.
வக்கீலுடன் சென்றார்உடனே அவர், ஒரு வக்கீலை அழைத்து கொண்டு தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ஏன் என்னை தேடி வந்தீர்கள் என்று கேட்டார்.
சியாமளா வக்கீலுடன் வந்ததால் அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன்பின் சியாமளா வீட்டிற்கு வந்து செல்பவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது டிரைவர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது தெரியவந்தது.
எனவே சியாமளாவின் நடவடிக்கை வேறு மாதிரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரித்ததை தொடர்ந்து பவித்ராவை கொலை செய்ததை சியாமளா ஒப்புக்கொண்டார்.
தனது கள்ளக்காதலனான சின்னமனூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (34) என்பவருடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீசில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மதுரையில் தனியார் விடுதியில் தங்கி இருந்த ரமேசை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
கள்ளக்காதலன்பவித்ராவை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து சியாமளா, அவரது கள்ளக்காதலன் ரமேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். சியாமளா வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் கூறியதாவது:– தனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர். சில ஆண்டுகளுக்கு முன் திருப்பதிக்கு வேனில் சென்றோம். அப்போது சின்னமனூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் டிரைவராக வந்தார். அப்போது அவருடன் ஏற்பட்ட நட்பு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்தநிலையில் ரமேஷ் தனக்கு பணக்கஷ்டம் உள்ளதாகவும், அதற்காக யாரையாவது கொலை செய்து கூட பணத்தை திருட வேண்டும் என்று என்னிடம் அழுது கொண்டே தெரிவித்தார். உடனே எனக்கு 10 ஆண்டுகளாக துணி தைக்க கொடுக்கும் பவித்ரா பற்றிய நினைவு வந்தது. அவர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதால், நகை, பணம் நிறைய வீட்டில் வைத்திருப்பார் என்று கருதினேன். வீட்டில் தனியாக இருப்பதால் அவரை கொலை செய்து விட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.
கத்தியால் குத்தினோம்அதற்காக செல்லூர் 60 அடி ரோட்டில் உள்ள ஒரு கடையில் 2 பாக்கெட் மிளகாய் பொடி வாங்கினோம். இதுதவிர 2 கத்தி, நைலான் கயிறு ஆகியவற்றை வைத்துக் கொண்டோம். பின்னர் வீட்டின் அருகில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து பவித்ராவிற்கு போன் செய்து, வீட்டிற்கு வருவதாக தெரிவித்தோம். அதன்பின் அவரது வீட்டிற்கு காலை 11 மணிக்கு இருவரும் சென்றோம். அங்கு பவித்ராவிடம், ரமேசை நான் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தேன். அப்போது எங்களை அழைத்து நாற்காலியில் உட்கார வைத்து பவித்ரா டீ கொடுத்தார்.
அவருடன் பேசிக் கொண்டு இருந்த போது திடீரென்று எழுந்து, பவித்ராவின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டேன். அப்போது ரமேஷ் கத்தியால் குத்தியதில் சியாமளா ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை கொலை செய்து விட்டு, பவித்ராவின் நகைகளை எடுத்துக் கொண்டோம்.
கொரியர் ஆசாமிபோலீசாரிடமிருந்து தப்ப மிளகாய் பொடியை தூவினோம். இதற்கிடையில் கொரியர் கொடுக்க ஒருவர் வீட்டின் கதவை தட்டினார். இதனால் பயந்த போன நான் குளித்து கொண்டிருப்பதாகவும், கொரியர் அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறினேன்.
பின்னர் அவர் சென்று விட்டாரா என்று கதவை திறந்து பார்த்த போது, அந்த நபர் என்னை பார்த்து விட்டார். உடனே அவரிடம் கீழ் வீட்டில் கொரியரை கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறினேன். அந்த நபரிடம் கீழ் வீட்டில் உள்ளவர்கள் கொரியர் கவரை வாங்கிக் கொண்டனர்.
அதன்பின் நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து, கோகலே ரோட்டில் ஆட்டோ பிடித்து புதூருக்கு சென்றோம். இவ்வாறு சியாமளா வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணைபோலீசார் ரமேசிடம் விசாரித்த போது, அவர் பாதி நகைகளை விளாங்குடியில் உள்ள நண்பர் மூலம் விற்பனை செய்ததும், மீதி நகைகளை சின்னமனூரில் விற்றதாகவும் தெரிவித்தார். சியாமளா மற்றும் ரமேசிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad