புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015


காவல்துறையின் தடையை மீறி தேசிய தலைவைர் பிறந்த நாளுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது !
சென்னை முகப்பேரில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழக அலுவலகம் அருகில் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம் வழங்குவதாக தமிழர் முன்னேற்றம் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பந்தல் , ஒலிபெருக்கி, நாற்காலிகள் , மேசைகள் , பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த காவல்துறை தேசிய தலைவருக்கு பிறந்த நாள் விழா எடுக்க அனுமதி இல்லை என்று கூறி அனைத்து ஏற்பாடுகளையும் கலைத்து விட்டனர். பதாகைகள் கிழித்து எறியப்பட்டன.
இருப்பினும் அன்னதானத்தை யார் தடுத்தாலும் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த நாளின் சிறப்பை எடுத்துரைத்து அனைவருக்கும் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது . மக்கள் அனைவரும் இந்த நாளை பற்றி அறிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ad

ad