புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2015

யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்




யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தலுக்கும், நடமாட்டத்திற்கும் மத்தியில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இன்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள ஆலயத்தில் மணி ஒலிக்க விடப்பட்டு,
பின்னர் வளாகத்திற்குள்ளேயே உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் புகைப்படம் வைக்கப்பட்டு, தாயக பாடலுடன் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் வெளிப்படையாக அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் புலனாய்வாளர்கள் பெருமளவில் நுழைந்து அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மாணவர்கள் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் அஞ்சலியை தாயக பாடலுடன் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவுகூர்ந்தனர்.

ad

ad