புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 நவ., 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள்- ஒருவர் மட்டுமே விடுதலைசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் 31 பேர் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
10 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளின் கீழ் இவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு பிணை வழங்க எவரும் முன்வராத நிலையில் அவர்களை மீண்டும் சிறைகளில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்பிரகாரம், குறித்த 31 தமிழ் அரசியல் கைதிகளும் மெஸின் சிறைச்சாலைக்கு நேற்று மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.
இதேவேளை, பிணை வழங்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளின் தகவல்களை லங்காசிறி செய்திப் பிரிவு இன்று திரட்டியது.
1. தக்ஷிதா குருதன்சலகே
2. லசந்த பத்மமாலா
3. டி.எ.பிரியந்த சிசிர குமார
4. எ.உதய சந்திமல்
5. பி.டி.திமுது சுரத பெரேரா
6. தங்கராசா புவனேஸ்வரன்
7. சுந்தரலிங்கம் அகிலம்
8. பூபாலகிருஷ்ணன் நிஷாந்தன் 

9. மயில்வாகனம் ஜெயகரன்
10. சசிதேவன் தங்கமலர்
11. சபாரத்னம் உமாகரன்
12. வீரசிங்கம் சுலக்ஷன்
13. சுப்ரமணியம் ரவிசந்திரன்
14. விஜயகுமார் கேதிஷ்வரன்
15. தியாகராஜ் ராமேஷ்வரன்
16. சங்கரலிங்கராசா குஷாந்தன்
17. துரைராஜ் அமுதாகரன்
18. பாக்கியநாதம் ரெஜினோல்ட்
19. பாக்கியநாதம் அலன்மன்ரோல்
20. மஹாதேவம் கிருபாகரன்
21. குமாரசாமி லிங்கேஷ்வரன்
22. ஆர்.தவராசா
23. செல்வநாயகம் ஜொன்சன் சுரேஷ்குமார்
24. கே.எஸ்.சுனில்
25. சிவகொழுந்து தங்கமணி
26. கலிமுத்து மகேந்திரா
27. கோணேஷபிள்ளை குகதாஸன்
28. பொன்னுதுரை கணேஷன்
29. கனகரத்னம் விஜயகுமார்
30. கருணாநிதி கங்காதேவன்
31. பாலசுந்தரம் சதானந்தம்

பிணை வழங்கப்பட்ட அரசியல் கைதிகளில் ஒருவர் மட்டுமே விடுதலை
நீதிமன்றினால் நேற்று பிணை வழங்கிய தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் மட்டுமே இன்று விடுதலையாகியுள்ளார்.
பிணை வழங்கப்பட்டவர்களின் தகவல்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு உரிய முறையில் செல்லாமையே, கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கான காரணமாகும்.
தலா பத்து லட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிணை வழங்கியிருந்தார்.
இதில் நான்கு பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய 27 பேரும் தமிழ் அரசியல் கைதிகளாகும்.
இவர்களில் ஒருவர் மட்டுமே இன்று பிணை கையொப்பமிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtzBSWSVeuzA.html#sthash.iYOlu2sx.dpuf