புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2015

கூட்டணிக்கு அழைப்பு: விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு

மக்கள் நலக் கூட்டணியில் சேருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
 தேமுதிக தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.
 கூட்டணிக்கு வருமாறும் விஜயகாந்துக்கு அழைப்பு கொடுத்தனர்.
 திமுக - அதிமுகவைவிட மக்கள் நலக் கூட்டணி சிறந்த கொள்கை கூட்டணி என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.
 இந்த நிலையில் கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் புதன்கிழமை காலை 11 மணிக்கு வந்தனர். விஜயகாந்தைச் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், திமுக - அதிமுகவின் வாக்குச் சதவீதம் தவிர்த்து பொதுவானவர்களின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும், அந்த வாக்குகளைப் பெற்றாலே மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்றுவிட முடியும் என்று விஜயகாந்திடம் விளக்கினர்.
 அனைத்தையும் கேட்ட விஜயகாந்த், கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், பரிசீலித்துத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர், மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் தேமுதிக அலுவலகத்தின் வாயில் வரை வந்து விஜயகாந்த் வழியனுப்பி வைத்தார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
 மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை அழைத்தோம். அன்புடன் வரவேற்ற விஜயகாந்த், எங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.
 அரசியலில் புதிய விடியல்: தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தலில் அரசியலில் புதிய விடியல் வர வேண்டும் என்ற எங்கள் கருத்தை விஜயகாந்திடம் தெரிவித்தோம். அந்தக் கருத்தை மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். மக்கள் நலக் கூட்டணி சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அவருக்கு நன்றி கூறினோம். ஜி.கே.வாசனும் எங்கள் கூட்டணி தொடர்பாக நல்ல கருத்தைத் தெரிவித்துள்ளார். அவரையும் சந்தித்துப் பேசுவோம். அவரும் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜயகாந்த் நீடிக்கிறாரா என்பது பற்றி நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றார்.

ad

ad