தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் பொன்வண்ணன், குட்டிபத்மினி, பூச்சிமுருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால், ‘’சிலம்பரசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு தயாராக இல்லை. அவருக்கு வேறு எந்த வகையிலாவது உதவி செய்ய அவரிடம் தொடர்ந்து பேசினேன். கார்த்தியும் சிம்புவிடம் இதுகுறித்து பேசினார். தலைவர் நாசர் சாரும் சிம்புவிடம் பேசினார். அவரின் குடும்பத்தாரிடமும் பேசினார். பீப் பாடல் விவகாரத்தில் மன்னிப்பு கேட்க சிம்பு தரப்பினர் தயாராக இல்லை. ’பீப்’ பாடல் விவகாரத்தை சட்டப்படி சந்தித்துக்கொள்வதாக சிம்பு தரப்பினர் தெரிவித்துவிட்டனர். அதனால் நாங்கள் இந்த விவகாரத்தில் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. மேலும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் நாங்களாக எதுவும் முடிவு எடுக்கமுடியாது. மற்றபடி, சிம்பு எங்களுக்கு எதிராக எதிரணியில் இருந்து செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அவருக்கு உதவி செய்யாமல் நாங்கள் மவுனமாக இருக்கவில்லை’’ என்றார்.
நடிகர் சங்கம் சார்பில் சிம்புவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, அவரை சங்கத்தில் இருந்து நீக்குவீர்களா? என்ற கேள்விக்கு, நடிகர் சங்கத்தில் இருந்து சிம்புவை நீக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை நீக்கவும்