புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2015

கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி

! மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்கிளிநொச்சி பரந்தன் விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர் பலி!
மோதிய ரைக்டர் வாகனம் தப்பி ஓட்டம்!
இன்று இரவு 7.00 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் முல்லை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கரைச்சிப் பிரதேச சபை உப அலுவலகப் பொறுப்பதிகாரியான முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராசா சுதர்சன் வயது-35 என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.
இன்று இரவு 7.00 மணியளவில் வவுனியாலிலிருந்து வருகைதந்த தனது மனைவி பிள்ளைகளை ஏற்றுவதற்காக பரந்தன் சந்தி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த கரைச்சிப் பிரதேச சபை உப அலுவலகப் பொறுப்பதிகாரி சுதர்சனை பரந்தனிலிருந்து கண்டாவளை நோக்கிப் பயணித்த கள்ள மண் ஏற்றும் ரைக்டர் (உழவு இயந்திரம்) வேகமாகச் சைற் மாறிச் சென்று மோதிவிட்டு பரந்தன் முல்லை வீதி 8 ஆம் ஒழுங்கை வழியாகச் சென்றுள்ளது.
குறித்த இடத்தில் படுகாயமடைந்தவர் இரத்த வெள்ளத்தில் இருந்து பயணிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது மரணமடைந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்று நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என்பதுடன் பரந்தன் சந்திப் பகுதிகளில் போக்கு வரத்துக் கண்காணிப்புப் பிரிவுப் பொலிசார் கடமையில் ஈடுபடுவது குறைவாகவுள்ளதாகவும் பலராலும் கூறப்பட்டுள்ளது.

ad

ad