தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை தி.நகரில் நடைபெற்றது. கூட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் ஆகியோர், ‘பீப்’ பாடலுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த நடிகை ராதிகாவுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும், சிம்பு செய்தது தவறுதான். இது மன்னிக்ககூடிய தவறுதான். மன்னித்துவிடவேண்டும் என்று சரத்குமார் சொல்கிறார். ஆனால், அதே வீட்டில் உள்ள ராதிகா, சிம்பு செய்தது தவறே அல்ல என்றும், நடிகர் சங்கம் இந்த விசயத்தில் மவுனம் காக்கிறது என்றும் கூறியுள்ளார். அதனால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளொம் என்று தெரிவித்தனர்.