இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் கோவா மற்றும் சென்னை அணிகள் மோதவுள்ளன
. நாளை ஞாயிற்றுக்கிழமை கோவாவில் நடைபெறவுள்ள இந்த இறுதிப் போட்டி இரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது எனலாம். இறுதிப் போட்டியானது கோவாவில் நடைபெறுவதால் கோவா அணியின் வெற்றிக்கு வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.ஏனெனில் சொந்த மண்ணில் இரசிகர்களின் ஆதரவுடன் கோவா களமிறங்குவதால் வெற்றிவாய்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது.
நடைபெற்றுவரும் இந்த தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் ஆட்டங்களில் இரண்டும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. கோவாவில் இடம்பெற்ற லீக் போட்டியில் 4 க்கு 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியும் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் கோவா அணியும் வெற்றி பெற்றன.
சென்னை அணி தனது அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட நிலையில் 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேவேளை கோவா தனது இரையிறுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.