சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர்
மைக்கல் பிளாட்டினி குற்றமற்றவர் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து சபை நெறிமுறைக்குழுவின் விசாரணை சூரிச்சில் இடம்பெற்றது. இதன்போது மைக்கல் பிளாட்டினி குற்றமற்றவர் என்பது நெறிமுறைக் குழுவுக்கு தெளிவுபடுததப்பட்டுள்ளதாக பிளாட்டினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ பிளாட்டினி குற்றமற்றவர். இந்த உண்மையை நாம் காண்பித்திருக்கின்றோம். சாட்சியங்களுக்கு நன்றிகள். சட்ட பேராசிரியர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற சட்ட ஆலோசனைகளுக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார். சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைகளில் ஐரோப்பிய கால்பந்து சபையின் தலைவர் மைக்கல் பிளாட்டினி மற்றும் சர்வதேச கால்பந்து சபைத் தலைவர் செப் பிளாட்டர் இருவருக்கும் இடையில் எழுத்துமூல ஆவணங்கள் எதுவுமற்று பணம் கைமாறபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இருவருக்கும் சர்வதேச கால்பந்து சபையின் நெறிமுறைக்குழுவால் 90 நாட்களுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டது.