புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2016

7 நபர்களால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை


சவுதி அரேபியாவின்  மிடில் ஈஸ்ட் மானிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-



சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் நண்ர்பகளுடன் காரில் சென்று கொண்டு இருந்த போது  ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது காரை மறித்து அவரை இழுத்து சென்று  7 பேர் கற்பழித்தனர். இந்த வழக்கில் கற்பழித்த 7 பேருக்கும் 5 வருட ஜெயில் தண்டனை விதிக்கபட்டது.சவுதி அரேபிய சட்டத்தின் படி  பொது இடங்களுக்கு செல்லும் போது பெண்களுக்கு அவரது குடும்பத்தை சேர்ந்த  ஒரு ஆண் துணையாக இருக்க வேண்டும்.இந்த சட்டத்தை மீறியதற்காக ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு 90 சவுக்கடி தண்டனை வழங்கபட்டது.

சவுதியின் நீதித்துறை விடுத்துள்ள அறிக்கையில் உணர்ச்சி படுவதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை நிதி அமைச்சகம் வரவேற்கிறது என கூறி உள்ளது.

இந்த தண்டனை குறித்து  பாதிக்கபட்ட பெண்ணின் வக்கீல் அப்துல் அல் லஹீம்  சவுதி அரேபிய கோர்ட்டீல் அப்பீல் செய்தார். பாதிக்கபட்ட பெண் ஊடகங்களில் பேசியதால் கோர்ட் 90 சவுக்கடி  தண்டனையை 200 ஆக உயர்த்தியது. மேலும் கோர்ட் வக்கீலின்  உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

ad

ad