புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

எம்மை கைது செய்தவர்களை கொல்வோம்..; ஆக்ரோஷத்துடன் தெரிவித்த வித்தியா படுகொலை சந்தேகநபர்கள்

எங்களை கைது செய்த ஊர்காவற்றுறை தமிழ் பொலிஸ் கோபியை நாங்கள் கொன்றுவிட்டு மீண்டும் இதே சிறைச்சாலைக்கு
வருவோம் என்று வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து தமது கொடூர குணத்தினை வாய்ச்சொற்களால் வெளிப்படுத்தியுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு முடிவடைந்த பின்னர் இக்கொலை வழக்கின் சந்தேகநபர்கள் 10 பேரையும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக சிறைச்சாலை பாதுபாப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தின் கட்டிடத் தொகுதியினை விட்டு வெளியில் அழைத்து வந்திருந்தனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நின்றிருந்த சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்போது சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் புகைப்படம், வீடியோ பிடித்துள்ளனர்.
இதன் போது இக்கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபர் பு.தவக்குமார் “நாங்கள் சிறைச்சாலையில் இருப்பதற்கு ஊர்காவற்றுறையில் இருந்த தமிழ் பொலிஸ் கோயியே காரணம்..,
அவர் தான் எங்களை எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் கைது செய்தார்.., வித்தியாவின் செத்தவீட்டிற்கு நாங்கள் சென்றது தான் குற்றமாகப் போய் விட்டது. செத்தவீட்டிற்க செல்லாமல் விட்டிருந்தால் கைது செய்யப்பட்டிருக்க மாட்டோம்..,
அந்த கோபி புங்குடுதீவு பக்கம் வரக்கூடாது. நான் இந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்று வந்தால், அம்மா மீது ஆணையாக சொல்கிறேன் கோபிக்கு பாடம் படிப்பிப்பேன், அவனுக்கு பாடம் படிப்பித்து மீண்டும் இந்த சிறைச்சாலைக்கு நான் வருவேன் பார்த்திருங்கள்” என்றார்.
இது தொடர்பாக மேலும் ஒரு சந்தேகநபர் சொல்கையில், “நாங்கள் எல்லொரும் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டவர்கள். குறிப்பாக சகோதரர்கள் மற்றும் உறவினர்களே கைது செய்யப்பட்டுள்ளோம்.
இதுவரையில் எமக்கு எதிரான எந்தவொரு குற்றத்தினையும் பொலிஸார் நிரூபிக்கவில்லை. நாங்கள் ஒன்றும் செய்யவில்லை” என்றார்.

ad

ad