புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்! சம்பந்தரிடம் ஜெய்சங்கர் உறுதி


உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரதானமாக அரசாங்கம் தயாரிக்க உள்ள உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதனை தவிர 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிய விடயங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார செயலாளர் இதன் போது கூறியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹாவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் :ஜெய்சங்கர் உறுதி
போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளியுறவு செயலாளர் .ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில்இ இன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின்போது,  புதிய அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கை, வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜெய்சங்கரிடம் சம்பந்தன் விளக்கியுள்ளார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாஇ இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் உடனிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ad

ad