புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2016

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவல்! கூட்டமைப்புடன் பேசுவோம் என்கிறது அரசாங்கம்

நாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் இருந்து கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரத்தை பரவலாக்கத்தை முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் என்று பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன மேலும குறிப்பிடுகையில்,
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
இந்த யாப்பில் உள்ளடங்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதே நிலைப்பாட்டிற்கு வந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக்கு வந்த போது அவரினால் குறிப்பிட்ட அளவு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்தார்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
இந்த முயற்சியின் போது தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இதற்காக வேண்டித்தான் முழு பாராளுமன்றத்தையும் நிர்ணய சபை என்ற கோட்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.
இதேவேளை நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கையில் இருந்து தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகியுள்ளது. ஒற்றையாட்சியின கீழ் அதிகாரத்தை பரவலாக்கம் முன்னெடுப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளன. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசவுள்ளோம் .
மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்திற்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

ad

ad