புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2016

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே சீமான் கைது

உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக அவர் மதுரை வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

 இந்நிலையில் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்ததாக நாம் தமிழர் கட்சியின் 20 பேரை போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பூதக்குடி அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த சென்ற சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் நடத்துவதால் தமிழகம் தற்போது பதற்றமான நிலையில் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad