புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2016

‘ஆன்–லைன்’ வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் மோசடி சென்னையில் தொழில் அதிபர் கைது

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின்
என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் ஆன்–லைன் வர்த்தகம் மூலம் தலா 50 கிலோ எடை கொண்ட 450 மூட்டை வேர்கடலையை வாங்கி மோசடி செய்துவிட்டதாகவும், அதற்கு உரிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில், இந்த புகார் மீது தியாகராயநகர் துணை கமிஷனர் சரவணன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் சுப்பிரமணி ஆகியோர் மேற்பார்வையில் தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்கு பிறகு முகமது ரசீத் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவர் இதுபோல ஆன்–லைன் வர்த்தகத்தில் ரூ.75 லட்சம் வரை பலரிடம் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது என்று போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னை மண்ணடியை சேர்ந்தவர் முகமது ரசீத்(வயது 34). தொழில் அதிபரான இவர் ஆன்–லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து கடுகு, மிளகாய், அரிசி போன்ற பொருட்களை ஆன்–லைன் மூலம் மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் மீது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோட்டேஷ் ஜெயின் என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

ad

ad