புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜன., 2016

இராணுவ பேருந்து மோதி நொருங்கியது கார் : ஒருவர் ஸ்தலத்திலே சாவு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை வவுனியா, செட்டிகுளம், மீடியாபாம் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
மன்னாரில் இருந்து மதவாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவத்தினர்  பேருந்தும், கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த கார் ஒன்றும் மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள மீடியாபாம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தததுடன், இருவர் காயமடைந்து செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.