புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2016

வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின் ஆணையை ஏற்று - மதித்து, வடக்கு மாகாண சபை இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
இதனை முன்கொண்டு செல்வதற்கான பிரேரணை வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.
இதே நடவடிக்கை கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டு, அதிகாரப் பகிர்வு யோசனையின் இறுதி வடிவம் - தீர்வுத் திட்டம், வடக்கு - கிழக்கு மாகாண சபைகள் இணைந்ததாக முன்வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் - அமைச்சர்கள் - அவைத் தலைவர் மற்றும் முதலமைச்சர் இடையேயான சந்திப்பு நேற்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புக்கான அனுமதி முதலமைச்சரினால் நேற்றுமுன்தினம் மாலை வரை வழங்கப்பட்டிருக்கவில்லை. நேற்றுக் காலையே சகல உறுப்பினர்களுக்கும், அவசரக் கடிதம் முதலமைச்சரினால் அனுப்பி வைக்கப்பட்டு நேற்று மாலையே சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் - அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் ஒரு சில உறுப்பினர்கள் மாத்திரம் தமது தனிப்பட்ட காரணங்களினால் கலந்துகொள்ளவில்லை. முதலமைச்சருடன் சேர்த்து 23 பேர் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றினர்.
வினைத்திறனான மாகாண சபையாகச் செயற்படுதல் விடயம் முதலில் பேசப்பட்டது. இதன்போது முதலமைச்சர், எதிர்காலத்தில் எவ்வாறு வினைத்திறனான மாகாண சபையாகச் செயற்படலாம் என்பது தொடர்பான யோசனையை முன்வைத்தார். இதனைச் சகல உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.
அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுதல் விடயத்தில், முதலமைச்சர் தான் இப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே செயற்படுகின்றேன் எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படுவேன் எனவும் உறுதிமொழி வழங்கினார். இதனையும் சகலரும் ஏற்றுக் கொண்டனர்.
இறுதியாக, அதிகாரப் பகிர்வு விடயத்தில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்பு தொடர்பில் பேசப்பட்டது. அதிகாரப் பகிர்வை நடைமுறை ரீதியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சரே, புதிய யோசனையை முன்வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னோடியாக, வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வில் - எதிர்வரும் 26 ஆம் திகதி பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த பிரேரணைக்கு அமைவாக, அதிகாரப் பகிர்வு யோசனை தயாரிக்கும் நடவடிக்கைகள் முதலமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

ad

ad