புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2016

சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)

.நன்றி கதிரவன் 

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழர் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைச் சிறாரின் கல்வித் தேவைகளுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட செந்தமிழ்ச் சோலை அமைப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இயல், இசை, நாடகம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நடன ஆசிரியர் கேசவா, ஆசிரியை பவானி சிறிதரன், பத்மா தர்மராஜா ஆகியோரின் மாணவர்கள் பங்கு கொண்ட பரதம் மற்றும் கீழைத்தேயக் கலப்பு நடனங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்தன.
தாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செந்தமிழ்ச் சோலை அமைப்பினால் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் உதவித் திட்டங்கள் தொடர்பிலான காணொளிகளும் நிகழ்வில் காட்சிப் படுத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கான அனைத்துச் செலவுகளும் உறுப்பினர்களின் சொந்தப் பணத்திலும், அனுசரணையாளர்களின் உதவியினாலும் மேற்கொள்ளப்பட்டதுடன், நிகழ்வு மண்டபத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவு மற்றும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டு  விற்பனை மூலம் கிடைத்த பணமும் தாயக உதவித் திட்டங்களுக்கே பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

ad

ad