புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை மாநாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்திருந்தார்.

இந்நிலையிலேயே அவரின் வருகையை  கண்டித்தும், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக இலங்கை அரசு தான் செய்த/ செய்துவருகின்ற இன அழிப்பை மூடி மறைப்பதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிவரை நடைபெற்றது.

தமிழினப் படுகொலையை மூடி மறைத்து இலங்கை்கு நற்பெயரை உண்டாக்கவும் இம் மாநாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை
வலுப்படுத்தவும் வருகை தரும் ஜனாதிபதியை எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த பல்லின வர்த்தக நிறுவனங்கள், மக்கள், அரச தரப்புகள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தால் கவனம் பெற்றதோடு தமிழ் இளையோர் அமைப்பால் துண்டுப்பிரசுரமும் பெற்றுக்கொண்டனர்.
பலத்த பாதுகாப்புடன் மாநாட்டுக்கு வருகை தந்த ஜனாதிபதி கண்டன ஆர்ப்பாட்டத்தை கவனித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கைகளை அசைத்தும் காட்டியபடி சென்றுள்ளார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தேசியக்கொடியை வானுயர உயர்த்தி அசைத்ததோடு அவரை நோக்கி இனப்படுகொலையாளி மைத்திரி என கோசம் இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad